இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள்: சுவிஸ் அரசு முழு ஆதரவு
இலங்கையின் வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் முழு ஆதரவு தரும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரக செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் முழு ஆதரவு
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் ஒலிவர் பிரஸ் கலந்து உரையாடினார்.
அப்போது இலங்கையின் வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள், வடக்கு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் வடமாகாணத்தில் தற்போது முன்னெடுத்து வரும் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |