பதின்மவயதினர் செய்த தவறு... பாடம் கற்றுக் கொடுத்த சுவிஸ் அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தில், பதின்மவயதினர் சிலர் செய்த தவறுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்துள்ளார்கள் அதிகாரிகள்.
பதின்மவயதினர் செய்த தவறு...
சுவிட்சர்லாந்தில், சுங்க அதிகாரிகள் கையில் சில பார்சல்கள் கிடைத்துள்ளன. அவை Vaud மாகாணத்திலுள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பார்சலில், பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்ட போலி அடையாள அட்டைகளும், ஓட்டுநர் உரிமங்களும் இருந்துள்ளன.
அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களைத் தேடிச் சென்றால், சில பதின்மவயதினர் சிக்கியுள்ளார்கள்.
அவர்களை விசாரித்தால், இரவு விடுதிக்குச் செல்வதற்காக தங்களை வயதுவந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக ஒன்லைனில் போலி அடையாள அட்டைகளை அவர்கள் வாங்கியுள்ளது தெரியவந்தது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஒரே ஒரு நாள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தினாலும் அது குற்றச் செயலாகும்.
ஆகவே, அந்த பதின்மவயதினர் அனைவரும் சிறார் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட, நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது.
அவர்கள், போலி ஆவணங்களை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை தற்போது நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |