சுவிஸில் திங்கட்கிழமை முதல் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு வெளியிட்ட அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து மத்திய அரசு, பிராந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தது.
பிராந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, திங்கட்கிழமை முதல் உணவகங்கள் போன்ற பல உட்புற இடங்களுக்குள் நுழைய மக்கள் தடுப்பூசி போட்டதற்கான அல்லது கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணிய முடியாத டிஸ்கோக்கள் மற்றும் பார்கள் போன்ற இடங்களுக்குள் நுழைய தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவைக் காட்ட வேண்டும்.
மக்கள் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும், 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தடுப்பூசி போடப்படாமலோ அல்லது கோவிட் நோயிலிருந்து மீண்டு வராமலோ இருந்தால், 10 பேர் மட்டுமே தனிப்பட்ட முறையில் கூட அனுமதி என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஜனவரி 24 வரை நீடிக்கும் என சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.