அவசர கால எரிபொருள் கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து
Switzerland has officially authorized the release of fuel from its strategic emergency reserves: சுவிட்சர்லாந்து, அவசர கால தேவைகளுக்காக என வைத்திருந்த எரிபொருள் சேமிப்பிலிருந்து எரிபொருளை விநியோகிக்க அனுமதியளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், எவ்வித எரிபொருள் உற்பத்தியும் நடைபெறுவதில்லை. தனக்குத் தேவையான 100 சதவிகித எரிபொருளையும் அந்நாடு இறக்குமதிதான் செய்கிறது.
ஆகவே, சுமார் நான்கரை மாதங்களுக்கான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை அவசர காலத் தேவைகளுக்காக சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து.
அவசர கால கையிருப்பில் கைவைத்த சுவிட்சர்லாந்து
இந்நிலையில், அந்த அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்காக, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்தில் The Cressier plant என்னும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கிவருகிறது.

அந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது செயல்படவில்லை. அது சீராக, இம்மாதத்தின் பாதி வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவருவது போல, சரக்குப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரைன் நதியில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வதும் கடினமாகி உள்ளது.

ஆகவேதான், அவசர கால கையிருப்பிலிருக்கும் எரிபொருளை வெளியே எடுக்க அதிகாரப்பூர்வமாக தற்போது சுவிஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |