பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை: வாக்கெடுப்புக்குத் தயாராகும் சுவிட்சர்லாந்து
பெண்கள் ராணுவ சேவை செய்வதை கட்டாயமாக்குவதா இல்லையா என்பதை முடிவு செய்ய சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
வாக்கெடுப்புக்குத் தயாராகும் சுவிட்சர்லாந்து
பெண்கள் ராணுவ சேவை செய்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 30ஆம் திகதி அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஃபெடரல் அரசைப் பொருத்தவரை, அரசு இந்த பிரேரணையை எதிர்ப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சரான Martin Pfister தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு ஏற்கனவே நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அவர்கள் ஊதியமின்றி அவற்றை நிறைவேற்றிவருகிறார்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் ராணுவத்தில் சேருவதா இல்லையா என்பது அவர்கள் விரும்பி எடுக்கும் சொந்த முடிவாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் Martin Pfister.
சுவிட்சர்லாந்தில், ஆரோக்கியமான உடல் நிலை கொண்டுள்ள ஆண்களுக்கு மட்டுமே ராணுவ சேவை கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |