சுவிஸில் இதற்கு தடை வருமா? பொது வாக்கெடுப்பு மூலம் இன்று முடிவு
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இன்று ஒரே பாலின ஜோடி திருமணத்தை அனுமதிப்பது தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் பொதுவாக்கெடுப்பில் ஒரே பாலின ஜோடி திருமணத்திற்கு மற்றும் அவர்கள் குழந்தையை தத்தெடுப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் சுவிஸ் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
சுவிஸ் மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றம் இந்த திருத்தப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் படி இந்த பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என Swiss People's Party (SVP) அழுத்தம் கொடுத்ததால் இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
சமீபத்திய கருத்து கணிப்பின் படி, சுவிஸ் மக்களில் 63% பேர் ஒரே பாலின ஜோடி திருமணத்திற்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
வாக்கெடுப்பின் இறுதி முடிவு இன்று பிற்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருத்தச் சட்டம் மூலம் ஒரே பாலின ஜோடிகள் திருமணம் சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளலாம் மற்றும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.
விந்து தானம் மூலம் திருமணமான லெஸ்பியன் தம்பதியினரும் குழந்தைகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
இது சுவிஸ் நாட்டவரின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கு குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.