வெளிநாடு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டவருக்கு நேர்ந்த துயரம்
A Swiss tourist has been killed in Cameroon following an attack by an elephant: கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த சுவிஸ் நாட்டவர் ஒருவர், யானை ஒன்று தாக்கியதில் பலியானார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளது.
சுவிஸ் நாட்டவருக்கு நேர்ந்த துயரம்
அந்த சுற்றுலாப்பயணிகள் கேமரூன் மலையில் ஏறிய நிலையில், அங்கு ஒரு கூட்டம் யானைகள் நின்றுகொண்டிருந்திருக்கின்றன.

அந்த யானைகள், இந்த மனிதர்கள் தங்கள் குட்டிகளை ஏதாவது செய்துவிடுவார்களோ என பயந்து அவர்களைத் துரத்தத் துவங்கியதாக வனத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யானைகள் துரத்த, அந்த ஆறு பேரும் ஆளுக்கொரு பக்கம் ஓடத் துவங்கியுள்ளார்கள். சிலர் மரங்களில் ஏற, இந்த சுவிஸ் நாட்டவர் தப்பியோடும்போது ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அவரைத் துரத்தி வந்த யானை அவரைத் தாக்க, அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் சென்ற பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவரும் காயமடைந்த நிலையில், அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என சுவிஸ் ஊடகமான swissinfo.ch தெரிவித்துள்ளது.