யானை தாக்கியதில் பலியான சுவிஸ் நாட்டவர்: கூடுதல் தகவல்கள்
A tourist has been killed and a British holidaymaker gored by a herd of elephants in a horror rampage: யானைக்கூட்டம் ஒன்று தாக்கியதில் சுவிஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், பிரித்தானியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த வாரம் யானைக்கூட்டம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்த சுவிஸ் நாட்டவரின் புகைப்படமும் சில கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன.
சுவிஸ் நாட்டவருக்கு நேர்ந்த துயரம்
நான்கு பிரித்தானியர்கள், சுவிஸ் நாட்டவர் ஒருவர் மற்றும் அமெரிக்கர் ஒருவர் என ஆறு பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று அவர்கள் கேமரூன் மலையில் ஏறிய நிலையில், அங்கு ஒரு கூட்டம் யானைகள் நின்றுகொண்டிருந்திருக்கின்றன.
அந்த யானைகள், இந்த மனிதர்கள் தங்கள் குட்டிகளை ஏதாவது செய்துவிடுவார்களோ என பயந்து அவர்களைத் துரத்தத் துவங்கியதாக வனத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யானைகள் துரத்த, அந்த ஆறு பேரும் ஆளுக்கொரு பக்கம் ஓடத் துவங்கியுள்ளார்கள்.
சிலர் மரங்களில் ஏற, த்ரூ ஆலைன் மேத்யூ (Throo Alain Mathieu Han) என்னும் இந்த சுவிஸ் நாட்டவர் தப்பியோடும்போது ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளார்.
பள்ளத்தில் விழுந்த மேத்யூவை, யானை ஒன்று தன் தந்தத்தால் தாக்கியுள்ளது.
யானைகள் அங்கிருந்து சென்றதும், அந்தக் குழுவிலிருந்த மற்றவர்கள் மேத்யூவைத் தேடி வந்துள்ளனர்.
அப்போது அவர் தன் கை வலிப்பதாக கூறியுள்ளார்.
உண்மையில் அவருடைய உடலுக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்திருக்கிறது என்கிறார்கள் அவரது சக சுற்றுலாப்பயணிகள்.

ஆளுக்கொரு பக்கம் ஓடி தப்பியது குறித்து திகிலுடன் விவரிக்கும் அவர்கள், தாங்கள் மேத்யூவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் சென்றதாகவும், ஆனால், அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.