சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு வெளிநாடொன்றில் சிறைத்தண்டனை: பின்னணி
Swiss tourist sentenced in Indonesia for insulting sacred day: இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு, உள்ளூர் பாரம்பரியத்தை அவமதித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டவரான Luzian Andrin Zgraggen (26) என்பவர், இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
உள்ளூர் பாரம்பரியத்தை அவமதித்த சுற்றுலாப்பயணி
மார்ச் மாதத்தில், பாலி தீவில் வாழும் இந்துக்கள், மௌன தினமாக ஒரு நாளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அன்று அரசு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் அமைதியாக தியானத்தில் ஈடுபடுவதுண்டு.

மருத்துவ அவசர நிலை ஏற்பட்டாலொழிய, அன்று யாரும் வெளியே செல்லக்கூடாது என விதி உள்ளது.
சொல்லப்போனால், விமான நிலையம் கூட அன்று இயங்காது.
இந்நிலையில், பாலி தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த Luzian, தான் தங்கியிருந்த ஹொட்டலிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஹொட்டல் ஊழியர்கள் உள்ளூர் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கியும், கேட்காமல் வெளியே சென்ற Luzian, கடற்கரை ஒன்றிற்குச் சென்று, வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், மௌன தினத்தை கேலி செய்த Luzian, கெட்ட வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார்.
இந்த காட்சிகளை அவர் சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்ய, மக்கள் அது குறித்து பொலிசில் புகாரளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து Luzian கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் சட்டத்தை மீறியதாக Luzian மீது குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி, Luzian பாலி மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவர்களுடைய நம்பிக்கையை காயப்படுத்தியதாகவும், பொதுமக்களிடையே கோபத்தைத் தூண்டியதாகவும் கூறியுள்ளதுடன், அதற்காக அவர் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |