ட்ரம்பால் அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் மக்கள் எண்ணிக்கையில் ஏற்பட இருக்கும் பாதிப்பு
புவி அரசியல் சூழல், வரிவிதிப்புகள் மற்றும் ட்ரம்பின் கொள்கைகளால் ஏற்கனவே அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் குறைய இருப்பதாக சுவிஸ் பயண கூட்டமைப்பின் தலைவர் கணித்துள்ளார்.
சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையலாம்
சுவிஸ் பயணக் கூட்டமைப்பின் தலைவரான மார்ட்டின் (Martin Wittwer) என்பவர், அடுத்த ஆண்டில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என கணித்துள்ளார்.

ட்ரம்பின் வரிவிதிப்புகளால் எரிச்சலடைந்துள்ள கனடா முதலான பல நாட்டு மக்கள் ஏற்கனவே அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்த்துவருகின்றனர்.
இந்த ஆண்டில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் மக்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை பாதியாகக் குறையக்கூடும் என கணித்துள்ளார் மார்ட்டின்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |