ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்த சுவிஸ் ஏற்றுமதி
சுவிஸ் ஏற்றுமதி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வீழ்ச்சியை சந்தித்த சுவிஸ் ஏற்றுமதி 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில், சுவிஸ் ஏற்றுமதி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சுவிஸ் ஏற்றுமதி 4.2 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுவிஸ் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புக்கான ஃபெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு கணிசமாக குறைந்த நிலையில், மார்ச் மாதம் ஏற்றுமதி 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. என்றாலும், மொத்தக் கணக்கின்படி, சுவிஸ் ஏற்றுமதி 3.4 சதவிகிதம் குறைந்துள்ளது.

குறிப்பாக, ரசாயனங்கள் மற்றும் மருந்தகப் பொருட்களின் ஏற்றுமதி, அதிகபட்சமாக 8.1 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், கைக்கடிகாரங்கள் மற்றும் வாகனங்கள் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது.
இந்த பின்னடைவுக்கு அமெரிக்க வர்த்தகம் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்திலிருந்து வடஅமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 14.4 சதவிகிதம் குறைந்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான ஏற்றுமதியோ 15.6 சதவிகிதம் குறைந்துள்ளது.
அத்துடன், சீனா மற்றும் ஜப்பானில் தேவைகள் குறைந்ததால் ஆசியாவுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது. ஐரோப்பிய ஏற்றுமதி மட்டுமே ஓரளவு அதிகரித்து ஆறுதலளிப்பதாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |