பக்கத்து நாட்டில் போராட்டங்கள்: சுவிஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
Swiss travellers affected by French curfews: பிரான்சில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள விடயம், சுவிஸ் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்கள் என பிரான்ஸ் கலவர பூமியாகிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மேக்ரான் எச்சரிக்கை
சனிக்கிழமையன்று, அரை மில்லியனுக்கும் அதிகமானோர் பிரான்சின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அரசு கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள் உட்பட பல இடங்கள் மீது தாக்குதல், தீவைப்பு, சூறையாடல் என அத்துமீறல்களும் நடைபெற்றன.

இந்நிலையில், தேவைப்பட்டால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
பிரான்சில் தடையுத்தரவு
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெக்கார்னு இரவு நேர தடையுத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், திங்கட்கிழமையும் தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டது. பொதுவாகவே, சுவிஸ் மக்கள் ஷாப்பிங் செய்வதற்காகவும், உணவருந்துவதற்காகவும், பாரீஸ், ஆல்ப்ஸ் மற்றும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வதற்காகவும் எல்லை தாண்டி பிரான்சுக்கு செல்வதுண்டு.
இந்நிலையில், பிரான்சில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள விடயம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுவிஸ் பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்ஸ் இரவு நேர தடையுத்தரவால், தங்கள் மாலை நேர பிரான்ஸ் பயணங்கள், இரவு உணவு அருந்துதல் போன்ற விடயங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், அடையாள அட்டைகள் சோதிக்கப்படுதல் மற்றும் மாற்றுப்பாதைகள் வழியாக செல்லக் கோருதல் போன்ற விடயங்கள் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் சுவிஸ் பயணிகள்.