வெளிநாட்டு மாணவர்களுக்கு மூன்று மடங்கு கல்விக்கட்டணம்: சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு
வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது.
மூன்று மடங்கு கல்விக்கட்டணம்
கனடா போன்ற நாடுகள், உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளன.
சொல்லப்போனால், சில நாடுகள் இப்படி வெளிநாட்டு மாணவர்களிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதால்தான், உள்ளூர் மாணவர்கள் குறைவான கல்விக்கட்டணத்தில் படிக்கமுடிகிறது எனலாம்.
அவ்வகையில், தற்போது சுவிட்சர்லாந்தின் The Federal Institutes of Technology (ETH) என்னும் கல்வி நிறுவனம், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதாவது, தற்போது 730 சுவிஸ் ஃப்ராங்குகள் கல்விக்கட்டணம் செலுத்தும் வெளிநாட்டு மாணவர்கள், 2025ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் துவங்கும் செமஸ்டர் முதல், 2.190 சுவிஸ் ஃப்ராங்குகள் கல்விக்கட்டணம் செலுத்தவேண்டும்.
சூரிச்சிலுள்ள ETH கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, சுமார் 40 சதவிகித மாணவ மாணவியர் வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கல்வி கற்க வந்துள்ள மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |