சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கல்விக்கட்டணம்: குறையாத மாணவர்கள் எண்ணிக்கை
சுவிஸ் பல்கலை ஒன்றில் கல்விக்கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அங்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
மூன்று மடங்கு அதிகரித்துள்ள கல்விக்கட்டணம்
சுவிட்சர்லாந்தின் ETH சூரிக் பல்கலைக்கழகம், கல்விக்கட்டணத்தை 730 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 2,190 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்த்தியுள்ளது.
அதாவது, கல்விக்கட்டணம் முன்பைவிட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு குறித்து கடந்த டிசம்பரிலேயே அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
என்றாலும், ETH சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவ மாணவியரின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த ஆண்டில், சுமார் 3,650 வெளிநாட்டு மாணவர்கள் சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள்.
கடந்த ஆண்டில் சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையும் இதேதான்.
என்றாலும், கல்வி கற்க விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி கற்க வருவதில்லை. ஆக, மாணவர்கள் எண்ணிக்கை மாறுமா, அதாவது குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |