கல்வியாளர்களைப் புறக்கணிக்கும் அமெரிக்கா: சுவிட்சர்லாந்துக்கு கிடைத்துள்ள நன்மை
அமெரிக்கா கல்வியாளர்களை புறக்கணிக்கத் துவங்கியுள்ள நிலையில், அவர்கள் பிறநாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார்கள்.
அமெரிக்கா புறக்கணிக்கும் கல்வியாளர்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கல்வியாளர்களை புறக்கணிக்கத் துவங்கியுள்ளார்.
ஏதேதோ காரணங்கள் கூறி அறிவியலாளர்களைத் தாக்கிவரும் ட்ரம்ப், ஆய்வு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவந்த நிதியை நிறுத்துவது, பிரபல கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பது முதலான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
ஆகவே, புகழ்பெற்ற கல்வியாளர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார்கள். வரலாற்றாளர்களான Timothy Snyder மற்றும் Marci Shore, கல்வியாளரான Jason Stanley, ஆகியோர் யேல் பல்கலையிலிருந்து வெளியேறி கனடாவுக்குச் சென்றுவிட்டார்கள்.
ஆக, அமெரிக்கா கல்வியாளர்களை புறக்கணிக்க, சுவிட்சர்லாந்து முதலான பிற நாடுகள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளத் துவங்கியுள்ளன.
தற்போது சூரிக் ETH பல்கலையில் பணியாற்றிவரும் முன்னாள் நாசா அலுவலரான Thomas Zurbuchen என்பவரும், சுவிஸ் பல்கலைகள் அமெரிக்காவின் நிலையற்ற தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று, சூரிக்கிலுள்ள ETH மற்றும் லூசானிலுள்ள EPFL ஆகிய பல்கலைக்கழகங்கள், புதிதாக எட்டு பேராசிரியர்களை பணிக்கு எடுத்துள்ளன.
அவர்களில் ஆறு பேர் அமெரிக்க கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |