வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என கண்டறியும் முயற்சியில் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என தேடும் முயற்சியில் சுவிட்சர்லாந்து
வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறியும் முயற்சியில் சுவிஸ் ஆய்வாளர்கள் இறங்கியுள்ள நிலையில், அதற்காக கருவி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளார்கள் அவர்கள்.
ஜெனீவா மற்றும் Bern பல்கலைக்கழகங்கள், spectrograph என்னும் கருவி ஒன்றை வடிவமைத்து, அதை சிலி நாட்டில் தற்போது கட்டப்பட்டுவரும் European Southern Observatory என்னும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிறுவ இருக்கிறார்கள்.
அதற்கான செலவு 120 மில்லியன் யூரோக்கள் ஆகும். இந்தக் கருவி, வெவ்வேறு கிரகங்களின் வளிமண்டல வேதி கூட்டமைப்பைக் கண்டறிந்து, அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதற்கான அடையாளங்களைக் கண்டுபிடிக்கும். 2032இல் இந்த திட்டம் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |