ஐரோப்பாவிலேயே முதலிடம் பிடித்துள்ள சுவிஸ் பல்கலைக்கழகம்
சுவிட்சர்லாந்தில் இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று ஐரோப்பாவிலேயே சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உள்ளன.
ஒன்று, ETH Zurich பல்கலைக்கழகம், மற்றொன்று, EPF Lausanne பல்கலைக்கழகம்.
இவற்றில் ETH Zurich பல்கலைக்கழகத்துக்கு ஒரு முக்கிய பெருமை உண்டு. இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் ஐன்ஸ்டீன் கல்வி பயின்றார், பின்னர் கல்வி கற்பிக்கவும் செய்தார்.
இந்த ஆண்டு, ETH Zurich பல்கலைக்கழகத்துக்கு மற்றொரு பெருமை கிடைத்துள்ளது. ஆம், ஐரோப்பாவிலேயே சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.
உலக அளவில் பார்க்கும்போது, அதற்கு 11ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை வகிப்பது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகும்.