நவம்பர் 1 முதல்... அகதிகள் நிலையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவரும் சுவிட்சர்லாந்து
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், உக்ரைன் அகதிகள் நிலையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
அகதிகள் நிலையில் ஒரு மாற்றம்
சுவிட்சர்லாந்தில் உக்ரைன் அகதிகளுக்காக S status என்னும் நிலை கொடுக்கப்பட்டுள்ளது.
இனி, ஒரு உக்ரைன் அகதி, உக்ரைனின் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்து அகதிகள் நிலையில் வித்தியாசம் காட்டப்பட உள்ளது.
அதாவது, ஒரு உக்ரைன் அகதியின் ஊர் தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியாகவோ அல்லது போர் நடைபெறும் இடமாகவோ இருக்குமானால் மட்டுமே இனி அவருக்கு S status என்னும், அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு நிலை வழங்கப்படும்.
இந்த விதி நவம்பர் மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. ஆறுதலளிக்கும் ஒரு விடயம் என்னவென்றால், ஏற்கனவே S status பெற்றவர்களை இந்த விதி பாதிக்காது.
இன்னொரு விடயம், S status பெற தகுதியற்ற உக்ரைன் நாட்டவர்கள், புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம், அல்லது வேறொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்குச் செல்லலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |