எச்சரிக்கும் விவசாயிகள்.. பல முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கும் சுவிஸ் மக்கள்!
செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடை செய்யும் திட்டம் மீதான வாக்கெடுப்பில் சுவிஸ் குடிமக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
அதுமட்டுமின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், fossil fuels-களுக்கான புதிய வரி மற்றும் அவசர கொரோனா நிதி போன்ற பிற திட்டங்கள் மீதான வாக்கெடுப்பிலும் சுவிஸ் குடிமக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் ரசாயன அல்லது உயிரியல் மருந்தாகும்.
இதுபோன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியங்களை நிறுத்த வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்குள் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற திட்டங்கள் பிரச்சாரகாரர்களால் முன்மொழியப்பட்டது.
தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு சேதம் ஏற்படுவதை பூச்சிக்கொல்லி தடை ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இந்த திட்டங்கள் அவர்களில் பலரை விவசாய தொழிலை கைவிட வைக்கும் என்று சுவிஸ் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறைப்படி, நாட்டில் அனைத்து முக்கிய முடிவுகளும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பின் மூலம் பூச்சிக்கொல்லிகளை தடை செய்யப்பட்டால், செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்த உலகின் இரண்டாவது நாடாக சுவிஸ் திகழும், இதுவரை உலகிலேயே பூட்டான் மட்டுமே ரசாயனங்களை தடை செய்துக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.