மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் பிரேரணை., சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு
சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகையை 10 மில்லியனாக கட்டுப்படுத்தும் பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
ஆரம்ப கணிப்புகளின்படி, 55 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், 45 சதவீதம் பேர் ஆதரித்தனர். இந்த பிரேரணையை வலதுசாரி Swiss People’s Party முன்வைத்தது.
2002-இல் சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 7.3 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது அது 9.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் 27 சதவீதம் பேர் வெளிநாட்டு குடிமக்கள்.

மக்கள் தொகைக்கு வரம்பு விதிப்பது போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றுச்சூழல் அழுத்தத்தை குறைக்கும் எனக் கட்சி வாதிட்டது.
ஆனால், வணிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், இது ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தத்தை பாதிக்கும் என்றும், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையில் 100,000 கையெழுத்துகள் சேகரித்தால் நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்த முடியும்.
இந்த வாக்கெடுப்பு, குடியேற்றம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |