சுவிஸின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களின் மனநிலை என்ன? வெளிப்படுத்திய கருத்து கணிப்பு
சுவிஸ் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை திட்டம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை திட்டம் மீது அடுத்த மாதம் அதாவது நவம்பர் 28ம் திகதி சுவிஸில் பொதுவாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அடுத்த மாதம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சுவிஸ் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சுவிஸ் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை திட்டத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது.
Gfs.bern நடத்திய கணக்கெடுப்பில், கடந்த மார்ச் மாதம் சுவிஸில் கொரோனா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 61% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பில் பங்கேற்ற 36% பேர் எதிர்ப்பும் மற்றும் 3% பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் சுவிஸில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி உயர்த்தப்பட்டது மற்றும் வெளிநாட்டு பயணம் மற்றும் சில நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க கொரோனா சான்றிதழ்களை கட்டாயமாக்க அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.