வெயில் காரணமாக நீர் நிலைகளை நாடிச் செல்லும் மக்கள்: எச்சரிக்கை விடுக்கும் சுவிஸ் அமைப்பு
சுவிட்சர்லாந்தில்,வெயில் காரணமாக தங்களைக் குளிர்வித்துக்கொள்வவதற்காக மக்கள் நீர் நிலைகளை நாடிச் செல்லும் நிலையில், தொண்டு நிறுவனம் ஒன்று மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த வாரம் நீர் நிலைகளில் நீந்தச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள். அதாவது, சராசரியாக ஆண்டொன்றிற்கு 45 பேர் சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கிறார்கள். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 60ஆக உயர்ந்தது.
தொண்டு நிறுவனம் எச்சரிக்கை
இந்நிலையில், Swiss Lifesaving Society என்னும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த Christoph Merki என்பவர், இப்படி தண்னீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் ஐந்தில் நான்குபேர் ஆண்கள் என்கிறார்.
பெரும்பாலும், 15 முதல் 29 வயது உடைய ஆண்களே இப்படி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
இந்த வயது ஆண்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளிலுள்ள அபாயங்களை சரியாக உணராமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறும் Christoph, நீச்சலில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே ஆறுகள் ஏரிகளில் நீந்தலாம் என்றும் மற்றவர்கள் தனியாக நீந்தச் செல்லவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |