சுவிஸ் சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
The Swiss Touring Club is warning drivers to prepare now for autumn hazards: இலையுதிர்கால சாலைகள் தொடர்பில் சுவிஸ் சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இலையுதிர்காலத்தில் பகல் நேரம் குறைவாகவும், குறைவான வெயிலே இருப்பதாலும், சாலைகளில் மெல்லிய பனிப்படலம் உருவாகும்.
சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
இந்நிலையில், சுவிஸ் சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் உருவாகியுள்ள கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பனிப்படலம் மற்றும் சாலையில் விழுந்துகிடக்கும் இலைகள் ஆகியவற்றால் வாகனங்களில் பிரேக் பிடிக்கும்போது, எதிர்பார்த்த இடத்தில் வாகனம் நிற்காமல் வழுக்கிக்கொண்டே செல்லும் அபாயம் உள்ளது.
அத்துடன், இது சில விலங்குகள் புலம்பெயரும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் காலம். ஆகவே, மான்கள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் சாலையின் குறுக்கே ஓடிவர வாய்ப்புள்ளது.
ஆகவே, சாரதிகள், இலையுதிர்காலத்துக்கு ஏற்ற வகையிலான டயர்களை வாகனங்களில் பொருத்துமாறும், சாலையில் விலங்குகள் நடமாட்டத்தைக் கவனித்து வாகனம் ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், வெளிச்சம் குறைவாக இருப்பதால், நடமாடும் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிப்பவர்களை பார்ப்பது கடினமாக இருக்கும்.
ஆகவே, சாரதிகள், வாகனத்திலுள்ள கண்ணாடிகளை துடைத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது வாகன விளக்குகளை எரியவிட்டபடி, கவனமாக வாகனங்களை இயக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.