ட்ரம்பின் வரிவிதிப்புகள்: சுவிஸ் கைக்கடிகாரங்கள் விலை உயரும் அபாயம்
அமெரிக்கா தனது வர்த்தகக் கூட்டாளர்கள் மீது கடும் வரிகளை விதித்துவருகிறது. அதிகபட்ச வரிவிதிப்பில் சிக்கிய நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.
சுவிஸ் இறக்குமதி மீது அமெரிக்கா 39 சதவிகித வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளது!
கைக்கடிகாரங்கள் விலை உயரும் நிலை
அமெரிக்கா சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 39 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதால் அமெரிக்காவில் சுவிஸ் கைக்கடிகாரங்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து அமெரிக்காவுக்கு 63 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
அதில், கைக்கடிகாரங்கள் மட்டும் 17 சதவிகிதம். அதாவது, சுமார் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான கைக்கடிகாரங்களை சுவிட்சர்லாந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ட்ரம்பின் வரிவிதிப்புகள் காரணமாக ஏற்கனவே சுவிட்சர்லாந்திலும் சுவிஸ் கைக்கடிகாரங்கள் விலை உயர்ந்துள்ளதால் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள் கைகடிகாரங்கள் வாங்க தயக்கம் காட்டுகிறார்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியும் சேர்ந்துகொள்ள, மே மாதம் 10ஆம் திகதி நிலவரப்படி சுவிஸ் கைக்கடிகாரங்கள் ஏற்றுமதி 10 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யும் சுவிஸ் பொருட்கள் மீதான வரியை 39 சதவிகிதமாக உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆக, சுவிஸ் இறக்குமதி மீதான வரி 39 சதவிகிதமாக அதிகரிக்கும் பட்சத்தில், அமெரிக்காவில் சுவிஸ் கைக்கடிகாரங்கள் விலை 20 சதவிகிதத்துக்கும் அதிகம் உயரலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |