ஜனவரி மாதம் வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து: சுவிஸ் விமான நிறுவனம் முடிவு
ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரை, இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்ய சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் வரை இஸ்ரேலுக்கு விமான சேவை ரத்து
ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரை, இஸ்ரேலுக்கும், இஸ்ரேலிலிருந்தும் விமான சேவையை ரத்து செய்ய சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் (SWISS) முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, லுஃப்தான்சா நிறுவனத்துக்கு சொந்தமான சுவிஸ் சர்வதேச விமான நிறுவனமான SWISS நிறுவனம், இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளதை நீட்டித்துள்ளது.
முன்னர், இம்மாதம், அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்திருந்த சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம், தற்போது அதை ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரை நீட்டித்துள்ளது.
ஏற்கனவே விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் பயணத்தை தள்ளிவைக்க விரும்பினாலோ, அல்லது பயணச்சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற விரும்பினாலோ, அவர்கள் தங்கள் விருப்பப்படி செய்யலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |