ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது சுவிஸ் அழகி பரபரப்புக் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், மிஸ் சுவிட்சர்லாந்து அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்ணொருவர், ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான ட்ரம்ப் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மீது சுவிஸ் அழகி பரபரப்புக் குற்றச்சாட்டு
மிஸ் சுவிட்சர்லாந்து அழகிப்போட்டியில் பங்கேற்றவரான Beatrice Keul (53), தனக்கு 22 வயது இருக்கும்போது, ட்ரம்ப் தன்னிடம் அத்துமீறியதாக தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1993ஆம் ஆண்டு மிஸ் ஐரோப்பா அழகிப்போட்டியின்போது பீட்ரைஸ் மீது கண் வைத்த ட்ரம்ப், அவரை நியூயார்க்கிலுள்ள தனது ஹொட்டல் ஒன்றிற்கு தன்னுடன் காபி சாப்பிட வருமாறு அழைத்துள்ளார்.
காபி சாப்பிடச் சென்ற பீட்ரைஸைக் கட்டியணைத்த ட்ரம்ப், அவர் உடல் முழுவதும் தவறாகத் தொடுவதும், முத்தமிடுவதுமாக இருக்க, அன்று தன் கதை முடிந்தது என்றே நினைத்தாராம் பீட்ரைஸ்.
தான் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்திருந்தது தனக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள பீட்ரைஸ், தன்னால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததாகவும், தான் எதிர்ப்பு காட்டியதிலிருந்து, தான் ட்ரம்புக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்பதை அவர் புரிந்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
அழகி மீது ட்ரம்ப் தரப்புக் குற்றச்சாட்டு
ஆனால், ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதால், அவரது எதிர் தரப்பினர் அவருக்கு எதிராக பீட்ரைஸ களமிறக்கியுள்ளதாக ட்ரம்ப் அணியினர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், பீட்ரைஸோ, தான் சமீபத்தில் தனது பெட்டி ஒன்றை சோதித்துக்கொண்டிருக்கும்போது, ட்ரம்ப் தனக்கு அனுப்பிய அழைப்பிதழ், விமான பயணச்சீட்டு முதலான பொருட்கள் தன் கண்ணில் பட்டதாகவும், அதனால்தான் இப்போது இந்த விடயம் குறித்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |