நேபாள பெருவெள்ளம்... நூலிழையில் உயிர் தப்பிய சுவிஸ் பெண்ணின் திகில் அனுபவம்
Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சுவிஸ் நாட்டவரான நட்டாலியா (Natalia Rjumin-Girardet, 70), வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு சுற்றுலாப்பயணிகளுடன் கைலாச மலைக்கு புனித யாத்திரை சென்றிருந்தார்.
நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம்
அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென வழியில் நிற்க, அவர்களுடைய சமையல்காரர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்.

அனைவரும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வெளியே எட்டிப் பார்க்க, தொலைவில் ஒரு மலையே பெயர்ந்துவருவதை கவனித்துள்ளார் அவர்.
அப்போதுதான் நிலச்சரிவு ஏற்படுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
உடனடியாக உடைமைகளைக் கூட எடுக்காமல், வேகவேகமாக அனைவரும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்கள்.
சரியாக அவர்களுடைய பேருந்து நின்ற இடத்தின் அருகில் படிக்கட்டுகள் இருக்க, படிக்கட்டுகளில் ஏறி உயரமான ஒரு இடத்தை அடைந்துள்ளார்கள் அனைவரும்.
அங்கிருந்து கீழே பார்க்கும்போது, வீடுகளும், கார்களும், ஏன் பேருந்துகளும் கூட அடித்துச் செல்லப்படும் பயங்கர காட்சிகளை கண்ணால் கண்டதை திகிலுடன் விவரிக்கும் நட்டாலியா, தாங்கள் உயிர் தப்பியது கடவுள் அனுக்கிரகம்தான் என்கிறார்.
ஆம், அன்றைய நிலவரப்படி, 1,100 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டிருந்தன, மேலும் 4,500 பேர் வரை மாயமாகியிருந்தார்கள்.
மலை உச்சியிலிருந்த சேமிப்புக் கிடங்கொன்றில், மழை, குளிருக்கு நடுவே அனைவரும் இரவைக் கழிக்க, மறுநாள் காலை ராணுவம் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அவர்களை மீட்டு காட்மாண்டுவுக்குக் கொண்டு சென்றுள்ளது.

நட்டாலியா தனது மொபைலை பேருந்திலேயே தவறவிட்டிருந்ததால், வேறொரு பெண்ணிடம் தனது சகோதரியின் மொபைல் எண் இருக்க, அவரது மொபைல் உதவியுடன் தன் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஆகத்து மாதம் 26ஆம் திகதியை மறக்கமுடியாது, அது நான் மறுஜென்மம் எடுத்த நாள் என்கிறார் நட்டாலியா!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |