ரூ.3.40 கோடி சம்பளமுள்ள Google வேலையை விட்ட சுவிஸ் பெண்., எதற்காக தெரியுமா?
சுவிஸ் பெண்ணொருவர் தனக்கு பிடித்தவருடன் நேரம் செலவழிப்பதற்காக ரூ.3.40 கோடி சம்பளமுள்ள Google வேலையை விட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக Google நிறுவனத்தில் பணியாற்றிய புளோரன்ஸ் போயரல் (Florence Poirel), ஆண்டுக்கு ரூ.3.40 கோடி ($390,000) சம்பளம் பெற்ற மூத்த நிர்வாகியாக இருந்தார்.
டப்ளின் மற்றும் சூரிச் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் பணியாற்றிய Poirel, 2024-ஆம் ஆண்டு தனது வேலையை விட்டு, வாழ்க்கையின் அர்த்தத்தை மீளாய்வு செய்யத் தீர்மானித்தார்.
அவர் CNBC-க்கு அளித்த பேட்டியில், “எனக்கு வேலை மீது விரக்தி இல்லை. குழுவும் வேலை சூழலும் இனிமையாக இருந்தது. ஆனால், நான் நேசிக்கும் மக்களுடன் செலவிடும் தரமான நேரமே மிக முக்கியமானது என நான் உணர்ந்தேன்” என Poirel கூறியுள்ளார்.
அவரது காதலன் Jan, அதே Google நிறுவனத்தில் பணியாற்றும் 17 ஆண்டுகள் சீனியர்.
ஓய்வுக்குப் பிறகே அவருடன் நேரம் செலவிட வேண்டும் என நான் காத்திருக்க முடியாது என அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
FIRE (Financial Independence, Retire Early) இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, Poirel தனது சேமிப்புகளை திட்டமிட்டு 1.5 மில்லியன் டொலர் (சுமார் ரூ.12.6 கோடி) சேமித்து, “mini-retirement” எனும் 18 மாத ஓய்வை எடுத்துள்ளார்.
2024 ஏப்ரலில், தம்பதியினர் இருவரும் வேலையை விட்டுவிட்டு, பயணம், நீச்சல், மற்றும் பெண்களுக்கு தொழில்முறை ஆலோசனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
“இந்த அளவிலான வருமானத்தை மறுப்பது பயமளிக்கக்கூடியது. ஆனால், நான் வேலை இழந்ததற்காக வருந்தவில்லை. வாழ்க்கை என்பது வேலைக்காக அல்ல, மகிழ்ச்சிக்காக” என Poirel கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |