தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண்... ஆடையின்றி உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி
வருவாய்க்கு சுற்றுலாவை பெருமளவில் நம்பி வாழும் தாய்லாந்து, கடந்த மாதத்திலிருந்துதான் தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் சுற்றுலா வருவதற்காக நாட்டை திறந்துவிடத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜூலை மாதம் 13ஆம் திகதி, தாய்லாந்தின் Phuket விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.
சுமார் 14 நாட்களுக்குப்பின், கடந்த செவ்வாயன்று மதியம் 2 மணியளவில் அவர் கடற்கரையை நோக்கி சென்றதை கண்டதாக ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், நேற்று, அவர் இடுப்புக்கு கீழே ஆடையின்றி, தார்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் நீரோடை ஒன்றின் அருகே உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவரது கால்சட்டை, உள்ளாடை, ஷூக்கள் மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவை அவரது உடல் கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Wichit என்ற இடத்தில் வாழும், Nattapong Sridum (31) என்பவர், தார்பாய் ஒன்றின் கீழிருந்து இரண்டு கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அந்த 57 வயது சுவிஸ் பெண், வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர் இறந்து மூன்று நாட்களாகிவிட்டிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலா இல்லாமல் வருவாயின்றி தவித்த தாய்லாந்து இப்போதுதான் மீண்டும் சுற்றுலாவுக்கு தன் நாட்டைத் திறந்துவிட்டுள்ள நிலையில், சுற்றுலாப்பயணி ஒருவர் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.