சொந்த பிள்ளைகளைக் கடத்திச் சென்று வெளிநாட்டில் தலைமறைவான சுவிஸ் பெண்
சொந்த பிள்ளைகளைக் கடத்தி வெளிநாடொன்றிற்கு கொண்டு சென்ற சுவிஸ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொந்த பிள்ளைகளை கடத்திய சுவிஸ் பெண்
சுவிட்சர்லாந்திலுள்ள Biel என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், கணவருக்குத் தெரியாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடொன்றிற்குச் சென்றுவிட்டார்.
தன் மூன்று பிள்ளைகளும் என்ன ஆனார்கள், உயிருடன் இருக்கிறார்களா, எங்கிருக்கிறார்கள் என எந்த தகவலும் தெரியாத நிலையில், ஓராண்டாக தவித்து வந்துள்ளார் அந்தப் பிள்ளைகளின் தந்தை.
வெளிநாட்டில் சிக்கிய பெண்
இந்நிலையில், அந்தப் பெண், வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், அந்நாட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஓராண்டாக, துனிசியாவில் சட்ட விரோதமாக தலைமறைவாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்ணைக் கைது செய்த துனிசிய பொலிசார், அவரை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |