எபோலா தொற்றுக்கு ஆளான பெண்மணி: சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்டார்
Swiss woman with Ebola evacuated from Nigeria to Geneva: எபோலா தொற்றுக்கு ஆளான சுவிஸ் குடிமகள், சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
நைஜீரியாவில், சுவிஸ் நாட்டவரான ஒரு பெண்ணுக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எபோலா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர், நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரின் மனைவி என சுவிஸ் வெளியுறவுத் துறை தெரிவித்தது.
சுவிஸ் தூதரின் மனைவிக்கு எபோலா தொற்று
நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரின் மனைவி, உகாண்டா நாட்டவர் ஆவார்.

42 வயதான அந்தப் பெண்ணுக்கு இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 20ஆம் திகதி, எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூதரும் அவரது மனைவியும் சமீபத்தில் உகாண்டா நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அந்த பயணத்தின்போது அந்தப் பெண்ணுக்கு எபோலா தொற்றியிருக்கலாம் என சுவிஸ் ஃபெடரல் வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்டார்
இந்நிலையில், அந்தப் பெண், சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். அவரை ஜெனீவா பல்கலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
அவரது கணவர் சூரிக் பல்கலை மருத்துவமனையில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.