வெளிநாடொன்றில் கடத்தப்பட்ட சுவிஸ் பெண் விடுவிப்பு
Swiss women kidnapped in Niger freed: நிஜர் நாட்டில் கடத்தப்பட்ட சுவிஸ் குடிமகள் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் குடிமகளான கிளாடியா (Claudia Abbt, 69), 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிஜர் நாட்டில் வாழ்ந்துவந்தார்.
பிரபல சுவிஸ் வங்கியில் தலைமை மனித உரிமைகள் மேலாளராக பணியாற்றிவந்த கிளாடியா, பின்னர் நிஜர் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய சந்தைக்காக தோல் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார்.
மாறிய காட்சி
தான் வாழும் இடத்தில் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதை நன்கறிந்திருந்த கிளாடியா, பாதுகாவலர் உடன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை.
ஆனால், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி, அந்த நிலைமை மாறியது. ஆம், அவரது வீட்டுக்குள்ளேயே நுழைந்து ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்றது.
கடத்தப்பட்ட சுவிஸ் பெண் விடுவிப்பு
இந்நிலையில், கிளாடியா தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் லிபியாவிலுள்ள Benghazi என்னுமிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், கிளாடியாவைக் கடத்தியது எந்த அமைப்பு, அவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
ஆனால், விடுவிக்கப்பட்ட கிளாடியா, லிபியா ராணுவத்தின் துணைத் தளபதியான கலிஃபா ஹஃப்தார் மற்றும் அவரது மகனான சதாம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.
அதாவது, நிஜரால் கடத்தப்பட்டவர்களை முன்பும் லிபியா ராணுவம் மீட்டுள்ளது. ஆனால், அது எப்படி அவர்களை மீட்டது, பேச்சுவார்த்தைகள் மூலமா அல்லது அதிரடி ஆபரேஷன் மூலமா என்பது குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை.