ஆண்களைவிட சீக்கிரமாக பெற்றோரை விட்டுப் பிரியும் சுவிஸ் பெண்கள்: ஒரு ஆய்வு
சுவிட்சர்லாந்தில், ஆண்களைவிட பெண்கள் சீக்கிரமாக தங்கள் பெற்றோரை விட்டுப் பிரிவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வு முடிவுகள் கூறும் செய்தி
விடயம் ஒன்றும் மோசமில்லை. அதாவது, ஆண்களைவிட பெண்கள் சீக்கிரமாகவே சொந்தக்காலில் நிற்பதற்காக பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழத் துவங்கிவிடுகிறார்களாம்.
பிள்ளைகள் 20 வயதை எட்டும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண் பிள்ளைகள் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்களாம்.
Keystone / Christian Beutler
ஆனால், 23 சதவிகிதம் ஆண் பிள்ளைகள்தான் அந்த வயதில் பெற்றோரைப் பிரிகிறார்களாம்.
30 வயதை எட்டும்போது, கிட்டத்தட்ட 97 சதவிகிதம் பெண்கள் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிவிட, அப்போதும் 90 சதவிகிதம் ஆண்கள்தான் வீட்டை விட்டு வெளியேறுகிறார்களாம்.
வீட்டை விட்டு வெளியேறினாலும், பெரும்பாலானோர் பெற்றோர் வாழும் இடத்துக்கு அருகிலேயே வாழ்வதுடன், அவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |