சத்தம் தாங்கமுடியவில்லை... சுவிஸ் பெண்ணொருவர் முன்வைத்துள்ள புகார் மனு
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ரயில்களில், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில், மக்கள் அமைதியாக பயணிக்கக்கோரும் வகையிலான விதிகள் நடைமுறையில் உள்ளன.
சுவிஸ் ரயில்களில் முதல் வகுப்பில் மட்டுமே quiet zones எனப்படும் இந்த வசதி உள்ளது.
பெண்ணொருவர் முன்வைத்துள்ள புகார் மனு
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் Biel என்னும் நகரைச் சேர்ந்த Myriam Wahli என்னும் பெண், ரயில்களின் இரண்டாவது வகுப்பிலும் இந்த quiet zone எனப்படும் வசதியை அறிமுகம் செய்யக்கோரி ஒன்லைனில் புகார் மனு ஒன்றை முன்வைத்துள்ளார்.

முதல் வகுப்புக்கு மட்டும் ஏன் இந்த வசதி என கேள்வி எழுப்பியுள்ள Myriam, சத்தம் என்பது பொதுமக்கள் உடல் நலனுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விடயம் என்றும், வெளியே தெரியாத உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு இந்த quiet zone வசதி பெருமளவில் வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Short story ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ரயில்களில், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில், மக்கள் அமைதியாக பயணிக்கக்கோரும் வகையிலான விதிகள் நடைமுறையில் உள்ளன.
சுவிஸ் ரயில்களில் முதல் வகுப்பில் மட்டுமே quiet zones எனப்படும் வசதி உள்ளது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டுப் பெண்ணொருவர், ரயில்களின் இரண்டாவது வகுப்பிலும் quiet zone வசதியை அறிமுகம் செய்யக்கோரி ஒன்லைனில் புகார் மனு ஒன்றை முன்வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |