ட்ரம்ப் வரி விதிப்பு: சுவிட்சர்லாந்து பதில் நடவடிக்கை எடுக்குமா?
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுக்க பல நாடுகள் தயாராகிவருகின்றன.
சுவிட்சர்லாந்து பதில் நடவடிக்கை எடுக்குமா?
ஆனால், சுவிட்சர்லாந்து ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.
சுவிஸ் பொருட்களுக்கு 31 சதவிகித வரிகள் விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், ஆளும் சுவிஸ் ஃபெடரல் கவுன்சில், ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.
சுவிஸ் ஜனாதிபதியான Karin Keller-Sutter, மோதல் போக்கைக் கைக்கொள்ளும் திட்டம் எதுவும் சுவிட்சர்லாந்துக்குக் கிடையாது என்று கூறியுள்ளார்.
சுவிஸ் பொருளாதாரத்துறை அமைச்சரான Guy Parmelin கூறும்போது, அமெரிக்காவின் முடிவு, அமெரிக்க நுகர்வோரைத்தான் அதிகம் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், சுவிஸ் நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வதுதான், அரை மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |