தனி மனிதனின் சிந்தனையில் உருவாகிய WTBF; பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தனி மனிதனின் சிந்தனையில் உருவாகி பலரது ஒத்துழைப்புடன் WTBF இன்று பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.
2014 WTBF இன் முதலாவது போட்டி தொடர் தொடக்கம் 7வது போட்டி வரை இதில் நடுவராக கலந்துக்கொண்டுள்ளேன் ( 2 தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துக்கொள்ள வில்லை) WTBF வளர்ச்சிபடிகள் , பணிகள் சிறப்புறதக்க வகையில் வளர்ச்சியடைந்து 7வது தொடரை நிறைவு செய்துள்ளது. இந்த போட்டி தொடர் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 9,10,11 ம்திகதிகளில் நடைப்பெற்றது.
திருகோணமலை பெட்மின்டன் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் சிறப்பான விடயமாகும் இப்போட்டியில் வடக்கு கிழக்கு போட்டியாளர்கள் தவிர்ந்த வீரர்களுக்கும் வாய்பளிக்கும் வகையில் All island open என்ற வகையில் போட்டியை ஏற்பாடு செய்திருந்தமை சிறப்பான விடயமாகும்.
இது பிரதேசம், மொழி,இனம் கடந்து பெட்மின்டன் விளையாட்டை நேசிக்கும் நபர்களை ஒன்றினைத்துள்ளது. இந்த போட்டி தொடர் தேசியமட்ட போட்டிகளுக்கு நிகரான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டு கூறவேண்டிய விடயமாகும் உலக தமிழர் பெட்மின்டன் அமைப்பின் ஸ்தாபகர் Kandiah Singam இப்போட்டிதொடரில் கலந்து கொண்டு போட்டிதொடரை மேற்பார்வை செய்து போட்டி சிறப்பாக நடைபெற வழிவகுத்தார்.
இது பிரதேசம், மொழி,இனம் கடந்து பெட்மின்டன் விளையாட்டை நேசிக்கும் நபர்களை ஒன்றினைத்துள்ளது.
இந்த போட்டி தொடர் தேசியமட்ட போட்டிகளுக்கு நிகரான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டு கூறவேண்டிய விடயமாகும். உலக தமிழர் பெட்மின்டன் அமைப்பின் ஸ்தாபகர் Kandiah Singam இப்போட்டிதொடரில் கலந்து கொண்டு போட்டிதொடரை மேற்பார்வை செய்து போட்டி சிறப்பாக நடைபெற வழிவகுத்தார்.
அத்தோடு யாழ் , கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட WTBF கிளை தலைவர் செயலாளர்,ஏனைய உறுப்பினர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் போட்டித்தொடரின் Referee Sanjeewa Wijesekera மற்றும் ஏனைய நடுவர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். அத்தோடு போட்டிக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய SLBA President Rohan de silva அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்... WTBF செயற்பாடுகள் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
தனிமனித சிந்தனை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு காரணமான திரு கந்தையா சிங்கம் அவர்களுக்கும் நேர்மனப்பாங்கானவர்கள் இணையும் போது பாரிய விடயங்களையும் இலகுவாக செய்யமுடியும் என்ற WTBF உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |