குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க அனுமதிக்காத சுவிஸ் உயிரியல் பூங்கா: விரக்தியில் நொந்த குடும்பம்
சுவிட்சர்லாந்தின் பாஸல் உயிரியல் பூங்காவில், தாயார் ஒருவர் தமது பிள்ளைக்கு தாய்ப்பால் அளிக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், அந்த குடும்பத்தினரை விரக்தியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஸல் உயிரியல் பூங்காவில் 3 மாத பிள்ளையுடன் வெள்லிக்கிழமை தம்பதி ஒன்று சென்றுள்ளது. மதிய உணவை வெளியே இருந்தே சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமது 3 மாத பிள்ளைக்கு தாய்ப்பாலளிக்க விரும்பியுள்ளார் அந்த தாயார். இதன்பொருட்டு, ஆளில்லாத அந்த உணவகத்தின் ஒரு அறையில் சென்று தாய்ப்பாளிக்க அனுமதி கோரியுள்ளார் அந்த கணவர்.
வெளியே கடுமையான குளிர் வீசுவதாலையே, உணவகத்தின் உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்று பதிலளிப்பதாக அப்போதிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளனர். வேறு வழியின்றி, அந்த தாயார் குளிருக்கு நடுவிலேயே பிள்ளைக்கு தாய்ப்பால் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாஸல் பூங்காவை பொறுத்தமட்டில் தாய்ப்பால் ஊட்டும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த வசதிகள் அமுலில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பாஸல் உயிரியல் பூங்கா நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில்,
ஊழியர்கள் அவர்களின் கடமையை சரியாகவே செய்துள்ளதாக கூறிய நிர்வாகம், அந்த தம்பதிக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது.