உங்கள் Smartphone-ஐ தினமும் இரவில் சுவிட்ச் ஆப் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஸ்மார்ட்போன்களை பலரும் உபயோப்படுத்துகிறோம். பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும்.
ஆனால் இது நல்லதல்ல! உங்கள் ஸ்மார்ட்போனை அவ்வபோதோ அல்லது இரவு நேரத்திலோ சுவிட்ச் ஆப் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
கதிர்வீச்சை கட்டுபடுத்தும்
ஸ்மார்ட்போன்களை நாம் இயக்காமல் வைத்திருந்தால் கூட அதில் இருந்து கதிர்வீச்சுகள் வெளியாகிறது. கதிர்வீச்சின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. வல்லுநர்கள் கதிர்வீச்சு அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள்.
இதை செய்வது மிக எளிது, அதாவது இரவு நேரத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டால் போதும். இப்படி செய்வது கதிர்வீச்சு வெளியாவது கட்டுபடும்.
சார்ஜிங்
சார்ஜ் செய்யும் போது குறைந்தபட்சம் உங்கள் தொலைபேசியை அணைக்கலாம். சார்ஜ் ஆகும் நேரத்தில் எப்படியும் அழைப்புகளைச் எடுக்கவோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பவோ நாம் போனை பயன்படுத்த மாட்டோம்.
இரண்டாவதாக, உங்கள் மொபைலை அணைப்பது உங்கள் தொலைபேசியின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது. நிபுணர்கள் கருத்துப்படி, போன் அணைக்கப்படும் போது பேட்டரி மிகவும் சீராக சார்ஜ் செய்கிறது, இது பேட்டரி ஆயுளுக்கும் பயனளிக்கிறது.
மன அழுத்தம் குறையும்
நாள் முழுவதும் எல்லா நேரங்களிலும் செல்போனை நான் இயக்கி கொண்டிருக்க வேண்டுமா என்ன? உங்கள் தொலைபேசியில் அதிக நேரத்தைச் செலவிடுவது மனச்சோர்வு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் நீண்ட காலமாக வளர்ந்து வருகின்றன.
ஆகவே குறைந்தபட்சம் இரவிலாவது ஸ்மார்ட்போனை அணைத்து வைக்க வேண்டும்.