உலக உணவுத் திட்டத்திற்கு மிகப்பெரிய தொகை கொடுத்த நாடு!
சுவிட்சர்லாந்து 2021-ல் உலக உணவுத் திட்டத்திற்கு 100 மில்லியன் சுவிஸ் பிரான்க் வழங்கியுள்ளது.
RTS அறிக்கையின்படி, இது World Food Programme திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து இதுவரை வழங்கிய மிக உயர்ந்த வருடாந்திரத் தொகையாகும்.
சர்வதேச உணவு நிவாரணத்திற்கான தேவை அதிகரித்து வருவதே இவ்வளவு பெரிய அளவிலான தொகைக்கு முக்கிய காரணியாக இருந்தது.
2021-ஆம் ஆண்டில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் 800 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடடினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நன்கொடையாக வழங்கிய பணத்தின் பெரும்பகுதி ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ, ஏமன், சோமாலியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்குச் சென்றது.
மனிதாபிமான உதவி தொடர்பாக பெடரல் கவுன்சிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மானுவல் பெஸ்லரின் கூற்றுப்படி, இந்த பணம் அவசர உணவு உதவிகளை வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றியது, முக்கியமாக யேமன் மற்றும் ஆப்கானிஸ்தானில் பெரிதும் உதவியது என்று கூறினார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைப் பொறுத்தவரை, 2022-ல் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்க சுவிஸ் உதவி இதேபோல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.