மீண்டும் வெளிநாட்டவர்களுக்கெதிராக முடிவெடுத்துள்ள சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்கள்.
வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிகப்படவேண்டும் என்று கோரி முன்வைக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளை சுவிஸ் தேசிய கவுன்சில் நிராகரித்துவிட்டது.
சுவிட்சர்லாந்தின் கிரீன்ஸ் கட்சியினர், ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கக் கோரியும், தேர்தலில் வேட்பாளராக நிற்க அனுமதி கோரியும் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்கள்.
அதேபோல, Social Democratic party (PS) கட்சியும், ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு முனிசிபாலிட்டி மட்டத்தில் முழு அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று கோரி மற்றொரு பிரேரணையை முன்வைத்தார்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் கீழவையிலேயே அந்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் முதலில் குடியுரிமை பெறட்டும், அதற்குப் பிறகு அவர்கள் வாக்களிக்கும் உரிமை பெறலாம் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.