சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க சுவிட்சர்லாந்தும் திட்டம்
சமீபத்தில், சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க வெனிஸ் நகரம் முடிவு செய்தது நினைவிருக்கலாம். அதாவது, வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டதால், அதைக் கட்டுப்படுத்துவதற்காக நுழைவுக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது வெனிஸ் நகரம்.
தற்போது வெணிஸ் நகரத்தைப்போலவே, சுற்றுலாத்தலங்களுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க சுவிட்சர்லாந்தும் திட்டமிட்டுவருகிறது.
நுழைவுக்கட்டணம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டம்
KEYSTONE/© KEYSTONE / ANTHONY ANEX
சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. பனிச்சறுக்கு காலங்களில் மட்டுமின்றி எந்த சூழலிலும் வெளிநாட்டவர்களைக் கவர்ந்திழுக்கும் சுவிஸ் கிராமங்கள் சில உள்ளன. அவற்றில் ஒன்று Lauterbrunnen.
Lauterbrunnen கிராமத்துக்கு ஆண்டுதோறும் எக்கச்சக்கமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு அக்கிராமத்தின் அழகு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், அக்கிராமத்தில் வாழும் மக்கள், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நடமாட்டத்தால் சற்றே பொறுமையிழப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே, சுவிட்சர்லாந்தின் சில சுற்றுலாத்தலங்களுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுவருகிறது. அத்துடன், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலாப்பயணிகள் வந்து குவிவதைத் தவிர்க்கும் வகையில், வெவ்வேறு நாட்டவர்கள், முடிந்தால் வெவ்வேறு காலகட்டத்தில் சுற்றுலா வருமாறும் ஆலோசனை கூறியுள்ளது சுவிஸ் சுற்றுலாத்துறை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |