சுவிஸ் டாங்கிகளை உக்ரைனுக்கு விற்பனை செய்ய தடை: Ruag SA விண்ணப்பம் நிராகரிப்பு
உக்ரைனுக்கு 96 Leopard-1 A5 டாங்கிகளை விற்பனை செய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தடை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்தியா, சீனா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள இருநாடுகளுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகின்றனர்.
#Switzerland has banned the sale of 96 Leopard-1 A5 tanks to Ukraine
— NEXTA (@nexta_tv) June 28, 2023
The Swiss company Ruag SA will not be able to sell 96 Leopard-1 A5 tanks to Ukraine via Germany. The Swiss Federal Council rejected the company's application citing the country's policy of neutrality and… pic.twitter.com/yhv8ajmaA1
இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு உக்ரைனுக்கு 96 Leopard-1 A5 டாங்கிகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.
இதன் மூலம் ஜேர்மன் வழியாக உக்ரைனுக்கு 96 Leopard-1 A5 டாங்கிகளை Ruag SA என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் நடுநிலைத்தன்மை மற்றும் தற்போதைய சட்ட ஒழுங்குமுறையை குறிப்பிட்டு Ruag SA நிறுவனத்தின் விண்ணப்பத்தை சுவிஸ் பெடரல் கவுன்சில் நிராகரித்துள்ளது.
Getty
நிராகரிக்கப்பட்ட Lex உக்ரைன் மசோதா
இதற்கு முன்னதாக Lex உக்ரைன் என்ற சட்ட மசோதாவை சுவிஸ் நாடாளுமன்றம் நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவானது, மூன்றாவது நாடுகள் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட எத்தகைய ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வழங்க அனுமதிக்கும் உரிமையை எடுத்துக் கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |