சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து: இந்தியா வெளியிட்டுள்ள செய்தி
சுவிட்சர்லாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நிகழ்ந்த தீவிபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அந்த துயர சம்பவம் தொடர்பில் இந்திய தூதரகம் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா வெளியிட்டுள்ள செய்தி
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 40 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், அந்த துயர சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய தூதரகம் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
@IndiainSwiss expresses its profound grief over the tragic fire explosion in Crans-Montana claiming several precious lives. Our heartfelt condolences to the bereaved families of the victims and those injured.
— India in Switzerland & Liechtenstein (@IndiainSwiss) January 1, 2026
In solidarity with the Government and the people of Switzerland…
சமூக ஊடகமான எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், பல உயிர்களைப் பலிவாங்கிய Crans-Montanaவில் நிகழ்ந்த துயர விபத்து ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jean-Christophe Bott/Keystone via AP