10வது நிமிடத்திலேயே கோல் அடித்த வீரர்: அல்ஜீரியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து
Switzerland
FIFA World Cup
Algeria
By Sivaraj
FIFA உலகக்கிண்ணப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-0 கோல் வித்தியாசத்தில் அல்ஜீரியாவை வீழ்த்தியது.
ப்ரீல் எம்போலோ கோல்
சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக்கிண்ணப் போட்டி பிசி பிளேஸ் வான்கூவரில் நடந்தது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே சுவிஸ் வீரர் ப்ரீல் எம்போலோ (Breel Embolo) கோல் அடித்து மிரட்டினார்.
சுவிட்சர்லாந்து வெற்றி
அதனைத் தொடர்ந்து, டேன் டோயீ (Dan Ndoye) 46வது நிமிடத்தில் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி Round of 16 சுற்றுக்கு முன்னேறியது.
ஜூலை 8ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் கொலம்பியா அல்லது கானா அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்ளும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US