சொந்த மண்ணில் சுவிட்சர்லாந்திடம் வீழ்ந்த கனடா
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கனடா தனது சொந்த மைதானத்தில் விளையாடியிருந்தாலும், சுவிட்சர்லாந்திடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதனால், கனடா “குழு B”யில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, அடுத்த சுற்றை லாஸ் ஏஞ்சல்ஸில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வான்கூவரில் நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுவிட்சர்லாந்தின் ரூபென் வர்காஸ் (46-வது நிமிடத்தில்) மற்றும் ஜோஹான் மான்சாம்பி (57 நிமிடத்தில்) ஆகியோர் கோல்கள் அடித்து முன்னிலை பெற்றனர்.
கனடா, மாற்று வீரர் பிராமிஸ் டேவிட் (76 -வது நிமிடத்தில்) அடித்த கோலால் நம்பிக்கை பெற்றாலும், சமநிலை பெற முடியவில்லை.
கனடா பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ், தனது நட்சத்திர வீரர் அல்போன்சோ டேவிஸ் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பதால், அவரை decoy-யாக பயன்படுத்தியதாக கூறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் முராட் யாகின், “எங்கள் அணியின் ஒற்றுமை வெற்றியை உறுதி செய்தது. அடுத்த சுற்றிலும் அதே ஆற்றலை காட்டுவோம்” என்று தெரிவித்தார்.
கனடா, காயம் காரணமாக இஸ்மாயேல் கோனே மற்றும் ஸ்டீபன் யூஸ்டாகியோ போன்ற முக்கிய வீரர்களை இழந்தது. இதுவே அணியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த தோல்வியால், கனடா தனது சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும், அடுத்த சுற்றில் வெற்றி பெற்று நாட்டை உற்சாகப்படுத்துவோம் என பயிற்சியாளர் உறுதியளித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |