அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த சுவிட்சர்லாந்து
ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு தங்கள் வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்துள்ளது சுவிட்சர்லாந்து.
அமெரிக்காவின் இரண்டு கோரிக்கைகள் நீராகரிக்கப்பட்டதாகவும், ஒரு பராமரிப்பு விமானம் மற்றும் இரண்டு போக்குவரத்து விமானங்களுக்கான வான்வழி நுழைவு கோரிக்கைகளை அங்கீகரித்ததாகவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
"நாங்கள் எப்போது பின்பற்றும் நடுநிலை கொள்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது" என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடியதால், உலகளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்தி, மேலும் பல்வேறு நாடுகளின் ஆதரவை நாடிவருகிறது.
ஆனால், சுவிட்சர்லாந்து, "எந்த தரப்பிற்கும் ஆதரவாக இருக்க முடியாது. எங்கள் நிலைப்பாடு எப்போதும் நடுநிலையாகவே இருக்கும்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, அமெரிக்காவின் போர் விமானங்கள் ஐரோப்பா வழியாக மத்திய கிழக்கிற்கு செல்லும் திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Today the Swiss government discussed military overflight requests from the US. Citing the law of neutrality, the Federal Council rejected two requests made in connection with the war in Iran. It decided to permit three flights. Details in DE/FR/IT: https://t.co/Dps46MlpBG
— Swiss Federal Government (@SwissGov) March 14, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland airspace closure, US military planes ban, Iran war neutrality, Switzerland foreign policy, US Iran conflict 2026, Neutral countries in war #Switzerland #IranWar #USMilitary #Neutrality #AirspaceBan #GlobalConflict #MiddleEast #WorldNews #Diplomacy #PeacePolicy