போர் என்றால் சுவிட்சர்லாந்தால் அது முடியாது: இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை
ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, சுவிட்சர்லாந்து தனது இராணுவச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என அந்த நாட்டின் இரணுவத் தளபதி கோரியுள்ளார்.
தடுத்து நிறுத்த முடியாது
ஒரு முழு அளவிலான தாக்குதல் சுவிட்சர்லாந்து மீது முன்னெடுக்கப்பட்டால் தற்போதைய சூழலில் அதிலிருந்து சுவிட்சர்லாந்தால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மிக முக்கியமான உள்கட்டமைப்பு மீது வெளிநாடுகளில் இருந்து முன்னெடுக்கப்படும் தக்குதல்களை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்து தயாராக வேண்டும் என்றும், ஆனால் நாட்டின் இராணுவத்திற்கு போதுமான ஆயுதப் பற்றாக்குறை இருப்பதையும் தளபதி தாமஸ் சூஸ்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டுடன் பொறுப்பில் இருந்து விலகும் தாமஸ் சூஸ்லி, சைபர் தாக்குதல் போன்ற தொலைவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையோ அல்லது நமது நாட்டின் மீதான ஒரு முழு அளவிலான தாக்குதலையோ நம்மால் தடுத்து நிறுத்த முடியாத சூழல் உள்ளது என்றார்.
ஒரு உண்மையான அவசரநிலையின்போது, மொத்த வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே முழுமையான ஆயுதங்கள் வழங்கப்படும் நெருக்கடியான சூழல் இருக்கிறது என்பதை அறிவது கவலைக்குரியது என்றார்.
சுவிட்சர்லாந்து தற்போது பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்து வருகிறது, பீரங்கி மற்றும் தரைவழி அமைப்புகளை நவீனமயமாக்கி வருகிறது. மேலும், பழமையான போர் விமானங்களுக்குப் பதிலாக லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35ஏ விமானங்களை மாற்றி வருகிறது.

பல நடுநிலை நாடுகள்
ஆனால் இந்தத் திட்டம் செலவு மீறல்களை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில், கடுமையான ஃபெடரல் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பீரங்கி மற்றும் வெடிமருந்துகளுக்கான செலவினங்கள் குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பாவை நிலையற்றதாக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் நம் கண் முன்னே நிகழும்போதிலும், இராணுவம் மீதான மனப்பான்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று சூஸ்லி குறிப்பிட்டுள்ளார்.
போர் என்றால் சுவிட்சர்லாந்து விலை இருப்பதற்கு நடுநிலைமை பாதுகாப்பு அளிக்கும் என்ற தவறான நம்பிக்கையே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஆயுதமற்ற நிலையில் இருந்தும் போரில் இழுத்துவிடப்பட்ட பல நடுநிலை நாடுகள் உள்ளன.

நடுநிலைமைக்கு ஆயுதங்களால் பாதுகாக்க முடிந்தால் மட்டுமே மதிப்பு உண்டு என்றும் சூஸ்லி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து தனது பாதுகாப்புச் செலவினங்களை 2032-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதமாக படிப்படியாக உயர்த்த உறுதியளித்துள்ளது.
தற்போது 0.7 சதவீதம் மட்டுமே செலவிட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், சுவிஸ் இராணுவம் சுமார் 2050-ஆம் ஆண்டில்தான் முழுமையாகத் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |