சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் தொற்று; கூடுதல் நடவடிக்கை எடுக்க திட்டம்
சுவிட்சர்லாந்தில் கோவிட்-19க்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று கன்டோனல் சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் (Lukas Engelberger) கூறியுள்ளார்.
கடுமையான நடவடிக்கைகள் குறித்து கன்டோன்களில் ஏற்கனவே விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று லூகாஸ் ஏங்கல்பெர்கர் ஒரு பேட்டியில் கூறினார்.
கோவிட-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், முதலாவதாக கன்டோன்கள் சுயமாக முயற்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது போதாது என்ற நிலை வரும்போது, அரசு மீண்டும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைளில், கட்டாய முகமூடிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் - எடுத்துக்காட்டாக, சான்றிதழ் கட்டாயமாக இருக்கும் நிகழ்வுகளில் அல்லது பள்ளிகளில் முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், அந்ததந்த பிராந்தியங்களுக்கு ஏற்ப சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் கூறினார்.
உணவகங்கள், ஜிம், திரையரங்குகள் மற்றும் பெரிய கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குச் செல்வதற்கு செப்டம்பர் 13 முதல் சுவிஸ் கோவிட் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 (ஜெர்மன் மொழியில் 3G விதிமுறை என அறியப்படும்) தடுப்பூசி போடப்பட்ட, பரிசோதிக்கப்பட்ட அல்லது மீட்கப்பட்டவர்களுக்கான நுழைவை இது கட்டுப்படுத்துகிறது.