சுவிட்சர்லாந்து ஒலிம்பிக்கில் எத்தனை பதக்கங்கள் பெற்றுள்ளது தெரியுமா?
ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்ற ஒவ்வொரு நாடும் எத்தனை பதக்கங்களை பெற்றுள்ளது என்பதை அறிவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அவ்வகையில், சுவிட்சர்லாந்து எத்தனை பதக்கங்களை பெற்றுள்ளது என்பதைக் காணலாம்.
சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 13 பதக்கங்களை பெற்றுள்ளது. அவற்றில் மூன்று தங்கப்பதக்கங்கள்.
கரடு முரடான பாதைகளில் சைக்கிள் ஓட்டும் mountain bike race போட்டியில்தான் சுவிட்சர்லாந்து சிறப்பாக விளையாடியுள்ளது. அந்த போட்டியில், சுவிட்சர்லாந்து ஒரு தங்கம், இரண்டுவெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.
அதுபோக, டென்னிஸ் விளையாட்டில் ஒரு தங்கமும் ஒரு வெள்ளியும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரு தங்கமும் ஒரு வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளது சுவிட்சர்லாந்து.
மேலும், சைக்கிள் பந்தயம், கடற்கரை கைப்பந்து மற்றும் நீச்சல் போட்டிகளிலும் சுவிட்சர்லாந்துக்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
சர்வதேச தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு சிறிய நாடு என்ற வகையில் சுவிட்சர்லாந்தை பொருத்தவரை இது ஒரு பெரிய கௌரவம்தான்.
பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே, அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.