வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

passport switzerland
By Balamanuvelan Mar 31, 2022 07:30 AM GMT
Report

சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம்.

அப்படியிருக்கும்போது, சுவிஸ் பாஸ்போர்ட் பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை!

அப்படி ஒர் பயங்கர விடயம் நடக்க வாய்ப்புள்ளதா?

அந்தக் கேள்விக்கான பதில், ஆம் மற்றும் இல்லை!

அதாவது, நீங்கள் ஒரு சுவிஸ் குடிமகனாக இருக்கும் பட்சத்தில், அதவாது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இல்லாமல், வெறும் சுவிஸ் குடிமகனாக மட்டுமே இருக்கும் பட்சத்தில், என்ன நடந்தாலும் உங்கள் சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாது.

வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Switzerland Citizenship Revoked Passport Explained

ஆனால், நீங்கள் சுவிஸ் மற்றும் மற்றொரு நாட்டின் குடியுரிமை கொண்டவராக, அதாவது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இருக்கும் பட்சத்தில், பெரிய குற்றச்செயல்கள் எதிலாவது நீங்கள் ஈடுபட்டால், உங்கள் சுவிஸ் சுவிஸ் பாஸ்போர்ட்டை நீங்கள் இழக்க நேரிடும்!  

அதுபோக, வேறு சில சூழல்களிலும் நீங்கள் உங்கள் சுவிஸ் பாஸ்போட்டை இழக்க நேரிடலாம்.

1. குடியுரிமை பெறும்போது (naturalisation) தவறான தகவல்களை அளித்தல் வெளிநாட்டவர் ஒருவர் குடியுரிமை பெறும் நடைமுறையின்போது, தவறான தகவலை அளித்தாலோ, அல்லது ஒரு முக்கியமான உண்மையை மறைத்தாலோ அவர் தனது குடியுரிமையை இழக்கும் அபாயம் உள்ளது.

2. தானாகவே குடியுரிமையை இழத்தல் சுவிஸ் பெற்றோருக்கு வெளிநாடு ஒன்றில் பிறந்த ஒரு குழந்தைக்கு வேறொரு நாட்டின் குடியுரிமையும் இருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தை வளர்ந்து அதற்கு 25 வயதாகும்போது, (அந்த நபர் சுவிஸ் அதிகாரிகளிடம் பதிவு செய்திருந்தாலோ அல்லது தான் தனது சுவிஸ் குடியுரிமையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தாலோ அன்றி) அந்த நபர் தானாகவே தன் சுவிஸ் குடியுரிமையை இழந்துவிடுவார். 

வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Switzerland Citizenship Revoked Passport Explained

அப்படி இழந்த குடியுரிமையை மீண்டும் பெற முடியுமா?

சில சூழ்நிலைகளில் அது சாத்தியமே. ஆனால், அது எளிதோ விரைவாக நடக்கும் விடயமோ அல்ல.

நீங்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக ஒன்றிணைந்து வாழ்ந்துவந்தால், நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், சுவிட்சர்லாந்துடன் உங்களுக்கு நெருக்கமான பிணைப்பு இருந்தால், பொது பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை சரியாக கடைப்பிடித்தால், பெடரல் அரசியல் அமைப்பின் கொள்கைகளுக்கு உரிய மதிப்பளித்தால் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள் மற்றும் வெளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லையென்றால், நீங்கள் இழந்த பாஸ்போர்ட்டை மீண்டும் பெற இயலும்.

வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? | Switzerland Citizenship Revoked Passport Explained

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US